வார பலன்கள் 
வெள்ளிமணி

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

கே.சி.எஸ். ஐயர்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக். 10 - 16) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார், உறவினர் இல்லம் தேடி வருவார்கள். முகத்தில் வசீகரமும் முகத்தில் மிடுக்கும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து புதிய பதவிகள் தேடிவரும். கலைத்துறையினருக்கு வருமானம் குறையும் அதேசமயத்தில் செலவுகளையும் குறைத்துக்கொள்வீர்கள். பெண்மணிகள் கணவருடன் அன்புடன் பழகுவீர்கள்.

மாணவர்கள் எதிர்பார்த்த பாடங்களில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

வருமானம் படிப்படியாக உயரும். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். சிலர் வீடு, நிலம் வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்குப் பெயரும் புகழும் கூடும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர்கள். பெண்கள், பிள்ளைகளின் வளர்ச்சிக்குப் பாடுபடுவீர்கள். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணங்கள் செய்து நன்மை அடைவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் விளைச்சல் அதிகரித்து புதிய இலக்குகளை எட்டுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தெளிவுடன் காரியமாற்றுவீர்கள். நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள். விரும்பிய பயணங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நல்லாதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். விவசாயிகளுக்குக் கொள்முதலில் லாபம் உயரும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறைக் காட்டுவீர்கள். கலைத்துறையினர் புதிய படைப்புகளைப் படைப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பெண்களுக்குக் கணவரிடம் அன்பு, பாசம் கூடும். மாணவர்கள் விரும்பிய துறைகளில் படித்து முன்னேறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். யோகா, தியானம் கற்றுக்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைக்க நேரிடும். வியாபாரிகளுக்குப் பல வகையிலும் வருமானம் கிடைக்கும். விவசாயிகள் கால்நடைகளை வாங்கி அதன் மூலமும் வருமானம் வரக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்களுக்கு மழலைப் பாக்கியம் உண்டாகும். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

எடுத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுவீர்கள். வியாபாரிகள் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகளுக்குக் கைநழுவிப் போன குத்தகைகள் திரும்பக் கிடைக்கும்.

அரசியல்வாதிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்கள் மனதில் தோன்றும் குழப்பங்களை தியானம் போன்றவற்றைச் செய்து விலக்கிவிடுவீர்கள். மாணவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

எதிர்பாராத சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளையும் திட்டமிட்டுச் சமாளிப்பீர்கள். விவசாயிகளின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகள் படிப்படியாக உயர்வைக் காண்பீர்கள். கலைத்துறையினர் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவீர்கள். பெண்களுக்கு ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் நண்பர்களின் இடையூறுகளை பொறுமையாக இருந்து சமாளிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 10, 11

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வெளியூர் பயணங்கள் ஈடேறும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சொத்துகளில் இருந்து வருவாய் வரத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பீர்கள். வியாபாரிகள் லாபத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் ஊடு பயிர்களைப் பயிரிட்டு லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வரவேற்புக் கிடைக்கும். பெண்கள், குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கக் காண்பீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக். 12, 13

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழில் சீராக நடக்கத் தொடங்கும். வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதி கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத்துறையினரின் வருமானம் உயர்வாக இருக்கும். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக். 14, 15, 16

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் நலனில் மேலதிகாரிகள் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரிகளுக்கு சில எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முயற்சி செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படாது. கலைத்துறையினர் உயர்ந்தோரைச் சந்தித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு கணவருடன் உறவு மேம்படும். மாணவர்கள் உற்சாகத்துடன் படிப்பில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தன்னம்பிக்கையும் திறமையும் கூடும். பெயர், புகழ், அந்தஸ்து, கெüரவம் உயரும். சிலர் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் கடன் வாங்கி புதிய பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளாலும் வருமானம் வரும்.

அரசியல்வாதிகள் வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்கள் குடும்பத்துடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலை உங்கள் விருப்பம் போல் விரிவுபடுத்துவீர்கள். முக்கிய முடிவுகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு சக வியாபாரிகளின் மத்தியில் மதிப்பு ஏற்படும். விவசாயிகளுக்கு பயிரில் புழு, பூச்சிகளின் தொல்லை இராது.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினர் புதிய பயிற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். பெண்கள் உடன்பிறந்தவருக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டில் பதுக்கிய 11 மூட்டை குட்கா பறிமுதல்

முதல்வா் கோப்பை: வாலிபாலில் சென்னைக்கு தங்கம்

லக்மே ஃபேஷன் வீக் 2025

விவசாயக் கடன்களை உரிய காலத்தில் செலுத்தினால் வட்டியை அரசே ஏற்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்

இன்று ஸ்ரீ கோடி தாத்தா சாமி குரு பூஜை

SCROLL FOR NEXT