தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப். 26 - அக். 2 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
பிள்ளைகளின் தடைபட்டிருந்த கல்வி தொடரும். சுப நிகழ்ச்சிகளின் மூலம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் பார்வையில் படாமல் மெளனமாகப் பணியாற்றுவீர்கள்.
கலைத்துறையினர் புதிய கலை நுட்பங்களைச் செயல்படுத்துவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் பெற்றோர்களின் சொல் கேட்டு நடப்பார்கள்.
சந்திராஷ்டமம் - செப். 27, 28.
முன்பின் தெரியாதவர்களால் நன்மைகள் உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் சிறிய லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியிலான பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரிகள் லாபம் அடைவீர்கள்.
விவசாயிகள் மாற்றுப் பயிர் செய்து வருமானத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் ரகசியங்களை எவரிடமும் வெளிப்படுத்த வேண்டாம். கலைத்துறையினர் பிறருக்கு முன் உதாரணமாக நடந்து கொள்வீர்கள்.
பெண்களின் உடல், மன நலம் இரண்டும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - செப். 29, 30, அக்.1.
தொழிலை செம்மையாக நடத்துவீர்கள். பூர்விகச் சொத்துகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகள் செலவு செய்து கடையை அழகுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் இரட்டிப்பாகும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் பாராமுகத்தை எதிர்கொள்வீர்கள். கலைத்துறையினர் மற்றவருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். பெண்கள் தக்க நேரத்தில் ஆகாரமும் ஓய்வும் எடுத்துக் கொள்வீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - அக்.2.
பெற்றோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். பொதுக் காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பாராட்டுகளை எதிர்பார்க்க முடியாது. வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்யலாம். விவசாயிகள் புதிய சந்தைகளில் விளைபொருள்களை விற்பீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் காரியங்களை நிறைவேற்ற குறுக்கு வழியை நாட வேண்டாம். கலைத்துறையினரின் திறமை வெளிப்படும். பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் விடியற்காலையில் எழுந்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உடன் பிறந்தோரின் ஆதரவை தக்க வைத்துக் கொள்வீர்கள். கோர்ட் விவகாரங்களில் எதிர்பார்த்த திருப்பம் உண்டாகும். வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களால் சிறு குழப்பங்களைச் சந்திப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகளுக்கு கால்நடைகளாலும் நன்மை உண்டாகும்.
கலைத்துறையினருக்குப் பாராட்டுகள் மகிழ்ச்சி அளிக்கும். பெண்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் யோகா, தியானம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கொள்கைகளில் பிடிவாதமாக இருந்து வெற்றி பெறுவீர்கள். நெடுநாளைய கனவொன்று பலிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை தோல்வி இல்லாமல் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு பயணங்களால் பணவரவு உண்டாகும். விவசாயிகளுக்குப் பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் தங்களுக்குக் கொடுத்த வேலைகளைச் சரிவர செய்து முடித்து விடுவீர்கள். கலைத் துறையினர் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் கணவருடன் ஒற்றுமையோடு பழகுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் கூடும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
இல்லத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வண்டி, வாகன யோகம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வேலைப்பளு குறையும். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் உத்தரவை மீறி எதுவும் செய்யமாட்டீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் அலட்சியப்போக்கைப் பெரிது படுத்த மாட்டீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில்
சந்தோஷம் நிறைந்திருக்கும். மாணவர்கள் கவனமாக முயற்சி செய்து முதலிடத்திற்கு வருவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
இக்கட்டான தருணங்களில் உங்கள் மனோதைரியத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். புது முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளை வெற்றிகரமாக செய்து முடித்து விடுவீர்கள். விவசாயிகளின் பயிர்களில் பூச்சிகளால் தொல்லை எதுவும் இருக்காது.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத் துறையினர் படிப்படியான வளர்ச்சிகளைக் காண்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் ஏற்படாது. பங்கு வர்த்தகத்தில் சிறு லாபம் இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகள் மனதில் சமநிலையோடு இருப்பார்கள். விவசாயிகள் புதிய முறையில் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களிடம் வெளிப்படையாகப் பேச வேண்டாம். பெண்கள் குடும்பத்தினரின் மனம் கோணாது நடந்து கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் பக்க பலமாக இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை .
புது வேகத்துடன் செயல்படுவீர்கள். புதிய ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அவநம்பிக்கைகள் அகலும். வியாபாரிகள் கூட்டாளிகள் உதவியுடன் கடன்களை அடைத்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளால் சிறிது கடன் கூடும்.
அரசியல்வாதிகளுக்கு தொலைதூரச் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். கலைத்துறையினரின் வெற்றிகள் சிறிது தாமதப்படும். பெண்கள் தங்கள் குடும்பத்தில் அமைதியையும் நிம்மதியையும் காண்பீர்கள். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்க வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணிகளைச் செய்து நற்பெயர் எடுப்பீர்கள்.
வியாபாரிகள் சிறிய முதலிடுகளைச் செய்து புதிய சந்தைகளை நாடுவீர்கள். விவசாயிகள் கடினமாகப் பாடுபட்டு விளைச்சலைப் பெருக்குவீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்திடம் பாராட்டும், பரிசும் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.
மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் திறமையுடன் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை .
வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைக் குறித்த நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரம் மூலமும் சிறிது கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.