முகப்பு
உலகம்

4 வெளிநாட்டவர்களுக்கு சீனாவில் மரண தண்டனை

போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு வெளிநாட்டவர்களுக்கு சீனாவில் மரண தண்டனை

Updated On : 2 மார்ச் 2013, 4:02 am IST
பகிர்:

போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு வெளிநாட்டவர்களுக்கு சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் தலைவன் நா காம், மியான்மரைச் சேர்ந்தவர். இவர் தவிர தாய்லாந்தைச் சேர்ந்த ஹசாங் காம், யி லாய், ஜா ஜிகா (லாவோஸ்) ஆகியோருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி மெகாங் ஆற்றில் 2 சரக்குக் கப்பலில் இருந்த 13 ஊழியர்களை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் கப்பலில்

30 லட்சம் டாலர் மதிப்பிலான 9 லட்சம் ஆம்பிடான் எனும் போதை மாத்திரை இருந்தது. இது தொடர்பாக இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இந்நிலையில் இவர்கள் நால்வரும் பொதுமக்கள் முன்னிலையில் இரண்டு மணி நேரம் அணி வகுப்பு நடத்தப்பட்டனர். பின்னர் ஒரு வேனில் இவர்களுக்கு விஷ ஊசி போடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனைக்குப் பிறகு இவர்களது உடல்கள் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.