அணு ஆயுத பயங்கரவாதம்: ஐஏஇஏ தலைவர் எச்சரிக்கை
அணு ஆயுதங்கள் மூலம் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டால் பெரும் அழிவைச் சந்திக்க
அணு ஆயுதங்கள் மூலம் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டால் பெரும் அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தலைவர் யுகியா அமானுஃப் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 110 நாடுகளைச் சேர்ந்த 1,200 பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் யுகியா அமானுஃப் பேசியது: அணு ஆயுதங்கள், அது தொடர்பான தொழில்நுட்பங்கள், கதிர்வீச்சுப் பொருள்கள் திருடுபோவது, கடத்தப்படுவதை தடுக்க அனைத்து நாடுகளுமே தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எனினும் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கையில் கிடைத்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நிகழ்த்துவது, அணு மின்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்துவது,அணு கதிர்வீச்சு மூலம் பெரும் நாசத்தை விளைவிப்பது என 3 வழிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இது விஷயத்தில் அனைத்து நாடுகளும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.
Advertisement
Advertisement