முகப்பு
உலகம்

இந்தியாவிடம் மின்சாரம் வாங்கக் கூடாது: ஹபீஸ் சயீத் எச்சரிக்கை

இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கக் கூடாது என பாகிஸ்தான் அரசுக்கு ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்

Updated On : 2 ஜூலை 2013, 4:25 am IST
பகிர்:

இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கக் கூடாது என பாகிஸ்தான் அரசுக்கு ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லாகூரை அடுத்த ஷேக்புராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சயீத் கலந்து கொண்டு பேசுகையில், ""பாகிஸ்தான் ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் இந்தியா, அதை பாகிஸ்தானுக்கே விற்கப் பார்க்கிறது.

இதை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வதில்லை. இந்தியாவிடமிருந்து மின்சாரத்தை வாங்கக் கூடாது. அவர்களிடம் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை'' என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

கடுமையான மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறு நீர் மற்றும் மின் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிபுக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சயீத் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.