முகப்பு
உலகம்

எகிப்தில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 16 பேர் சாவு

எகிப்தில் அதிபர் முகமது மோர்ஸி பதவி விலகக் கோரி கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வரும்

Updated On : 2 ஜூலை 2013, 4:21 am IST
பகிர்:

எகிப்தில் அதிபர் முகமது மோர்ஸி பதவி விலகக் கோரி கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் 16 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை மதியம் மாலை 5 மணிக்குள் (இந்திய நேரப்படி) அதிபர் பதவி விலகவேண்டும் மற்றும் புதிய அதிபரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தவேண்டும் என்று போராட்டக்காரர்களை வழிநடத்தி செல்லும் "தமராடு' அமைப்பு இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும், அவர் பதவி விலகாதபட்சத்தில் தேசத் துரோக குற்றச்சாட்டை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு அதிபர் முகமது மோர்ஸிக்கு எதிராக கடந்த 2 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, எகிப்தின்  பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், மோர்ஸி ஆதரவாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த வன்முறையில் அசியூர் மாகாணத்தில் 3 பேர், பெபோம், பெனிசூப் மற்றும் கப்எல்-செயிக் மாகாணங்களில் தலா ஒருவர் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். மற்ற பகுதிகளுக்கும் வன்முறை பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்னர்.

இந்த நிலையில், அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார். அதன்பின்னர் நடந்த தேர்தலில் முகமது மோர்ஸி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவதிலும், பாதுகாப்பு விஷயத்திலும் மோர்ஸி அரசு சரியாகச் செயல்படவில்லை என்றுகூறி அங்கு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.