எகிப்தில் சிறையிலிருந்து முபாரக் விடுவிப்பு
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், சிறையிலிருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், சிறையிலிருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
கெய்ரோவில் உள்ள டோரா சிறைச் சாலையிலிருந்து மருத்துவ ஹெலிகாப்டர் மூலம் அவர் வெளியேறினார். அப்போது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், கெய்ரோவின் புறநகர்ப் பகுதியான மாடியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், முபாரக் மீதான விசாரணை (கொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டு) நிலுவையில் உள்ளது. அதனால் அவரை வீட்டுக் காவலில் வைக்குமாறு அந்நாட்டு அதிபர் ஹசெம் எல்-பெப்லாவி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
எதிர்ப்பு: முபாரக், விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏப்ரல்-6 இளைஞர் இயக்கத்தினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட உள்ளது.
எகிப்தில், முபாரக் நீக்கப்பட்ட பின், அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட முகமது மோர்ஸி சமீபத்தில் ராணுவத்தால் பதவி விலக்கப்பட்டார். இதை எதிர்த்து நடந்து வரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.