உலகம்

இலங்கையில் தமிழக பத்திரிகையாளர் கைது

தினமணி

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை படம் பிடித்ததாகக் கூறி அந்நாட்டு போலீஸாரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறியதாவது:

தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த நபர் ராணுவ முகாம்கள், சாலைகள், போரினால் பாதிப்புக்குள்ளான கட்டடங்கள் ஆகியவற்றை படம் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டார். சுற்றுலாவுக்கான விசாவில் அவர் இலங்கை வந்துள்ளார். விசா விதிமுறைகளை மீறியதன் காரணமாக கைது செய்யப்பட்ட அவர், குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று ரோஹானா கூறினார்.

கிளிநொச்சி, 2009ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகளின் அதிகார மையமாக விளங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT