ஈரானுக்குள் நுழைய முயன்ற 10 ஆப்கானியர் சுட்டுக் கொலை
ஈரான் நாட்டு எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆப்கானிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஈரான் நாட்டு எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆப்கானிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஆப்கானிஸ்தான் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராட் மாகாணத்தில் இருந்து ஈரான் எல்லைக்குள் 200-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டவர் வெள்ளிக்கிழமை இரவு நுழைய முயன்றனர்.
அப்போது ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். 12-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதால் வேலைவாய்ப்பைத் தேடி ஆண்டுதோறும் ஏராளமான ஆப்கானியர்கள் சட்டவிரோதமாக ஈரானுக்குள் நுழைகின்றனர்.