உலகம்

ஆப்கன் தலைநகரில் தற்கொலைபடை தாக்குதல்: 2 பேர் பலி, 7 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள வெளிநாட்டு விருந்தினர் மாளிகையில் தலிபான் தற்கொலைபடையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.

IANS

ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள வெளிநாட்டு விருந்தினர் மாளிகையில் தலிபான் தற்கொலைபடையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.

ஹாயிர்பூர் பகுதியில் உள்ள ஸ்பானிஷ் தூதரகத்தை சேர்ந்த விருந்தினர் மாளிகைக்கு வெளியே உள்ளூர் நேரப்படி (மாலை 5.40 மணிக்கு) பயங்கரவாதிகள் இந்த கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியுள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரி உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் குழு பொறுப்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT