உலகம்

இலங்கையில் தமிழர்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டம்

DIN

இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக அதிபர் மாளிகையை நோக்கி அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். எனினும், அவர்கள் பாதி வழியிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் அங்குள்ள செய்தியாளர்களிடம் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இலங்கைத் தமிழ் மக்களின் குறைகள் இன்னமும் நிவர்த்தி செய்யப்படவில்லை.
அதேநேரத்தில், தமிழர் பகுதிகளில் சிங்களர்களை திட்டமிட்டே குடியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதனை இலங்கை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல், தமிழர் பகுதிகளில் புத்த மதக் கோயில்கள் அமைக்கப்பட்டு வருவதையும் நிறுத்த வேண்டும். ராணுவத்தினரால் கையப்படுத்தப்பட்ட தமிழர்களின் நிலங்கள் திருப்பி அளிக்கப்பட வேண்டும். சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் நிறுத்தப்படும் வரை தமிழர்களின் போராட்டம் தொடரும் என்றார் விக்னேஸ்வரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT