உலகம்

நவாஸ் ஷெரீஃப் அவசர ஆலோசனை

DIN

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் தயார் நிலை குறித்து அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அவசர ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியவுடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதி ரஹீல் ஷெரீஃபும் தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது, ஆக்கிரமிரப்பு காஷமீரில் இந்திய ராணுவம் நிகழ்த்திய தாக்குதல் குறித்தும், உள்நாட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நவாஸிடம் ரஹீல் ஷெரீஃப் விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நஸீர் ஜன்ஜுவா, உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் ஆகியோர் அடுத்தடுத்து நவாஸ் ஷெரீஃபை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு நவாஸ் ஷெரீஃப் ஏற்பாடு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT