உலகம்

நேபாளத்தில் கன மழை: 49 பேர் பலி

DIN

நேபாளத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்தது.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. நேபாளத்தின் 21 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சமவெளிப் பகுதியான தெராயில் பெரும்பாலான நிலப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பஞ்சதர், சிந்தூலி, ஜாப்பா, மொராங் ஆகிய மாவட்டங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டன. வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்தது. 35,843 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சுமார் ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT