உலகம்

பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி

DIN

ஔகடோவுகோவ்: மேற்கு ஆப்பிரிக்காவின் பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் கானாவிற்கு அருகில் உள்ள நாடு பர்கினா பாசோ. பர்கினாவின் தலைநகர் ஔகடோவுகோவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், 17 பேர் உயிரிழந்ததாவும், 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT