உலகம்

ஹிஸ்புல் முஜாஹிதீன்: வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.
இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ''ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு, பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, அமெரிக்காவில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன. மேலும், அந்த பயங்கரவாத இயக்கத்துடன் அமெரிக்க குடிமக்கள் தொடர்பு வைத்துக் கொள்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான, பாகிஸ்தானைச் சேர்ந்த சையது சலாவுதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த 2 மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT