உலகம்

நிதியா? பயங்கரவாத ஆதரவா? பாகிஸ்தானை நெருக்கும் அமெரிக்கா!

DIN

வாஷிங்டன்: தாங்கள் வழங்கும் நிதி உதவி வேண்டும் என்றால் உள்நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இவ்வாண்டு துவக்கத்தில் பதவி ஏற்ற சமயத்தில் இருந்து பயங்கரவாத ஆதரவு விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான பிடியை இறுகச் செய்தது. அத்துடன் ஆப்கானிஸ்தானில் தொடரும் தாலிபான் பயங்கரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.

அதற்கு எதிர் வினையாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டி அமெரிக்கா அந்நாட்டிற்கு வழங்கும் உதவியை நிறுத்தி வைத்து உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்து கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு அமரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா வான்வழி தாக்குதலை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, 'நாங்கள் அமெரிக்காவிடம் இருந்து பொருள் மற்றும் நிதி உதவியை நாடவில்லை. எனவே அமெரிக்கா நம்பிக்கையுடனும், மரியாதையுடன் எங்களை நடத்த வேண்டும்' என்று அமெரிக்க தூதரிடம் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நிதி உதவி வேண்டும் என்றால் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்பொழுது மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT