உலகம்

அமெரிக்காவை மிரட்டும் ஹார்வி புயல்: ஹூஸ்டனில் 200 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பு!

IANS

புதுதில்லி: அமெரிக்காவைக் கலங்கடித்து வரும் ஹார்வி புயலால் உருவான வெள்ளத்தில், ஹூஸ்டன் நகரத்தில் 200 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உருவான வெப்பமண்டல புயலான ஹார்வி அங்கு கடுமையான மழைப்பொழிவை உண்டாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அங்கு வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக மீட்பு பணியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனும் இந்த வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது.   

இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்ம ஸ்வராஜ் இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பின் வருமாறு:

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருவதாக  ஹூஸ்டனில் உள்ள துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அவர்கள் கழுத்தளவு நீரினால் சூழப்பட்டுள்ளனர்.  

அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு நாங்கள் ஏற்பாடுகள் செய்ய முயன்றோம். ஆனால் மீட்பு பணிகளுக்கு போதிய படகுகள் இல்லை என்று அமெரிக்க கடற்படை மறுத்து விட்டது.

அவர்களுக்கு தேவையான உதவிகளை ஹூஸ்டன் துணைத் தூதரக அதிகாரி அனுபம் ராய் ஒருங்கிணைத்து வருகிறார்.

இந்திய மாணவர்கள் ஷாலினி மற்றும் நிகில் பாட்டியா இருவரும் தற்பொழுது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அவர்களது உறவினர்கள் அங்கு சீக்கிரம் சென்று சேருவதை நாங்கள் உறுதி செய்வோம்.

இவ்வாறு அவரது தொடர் ட்வீட்டுகளில் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT