உலகம்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி; 30 பேர் காயம்

DIN

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரு உணவகங்களைக் குறிவைத்து வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்; 30 பேர் காயமடைந்தனர்.
அந்த நகரில் ஒரே மாதத்தில் நடத்தப்படும் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் இது.
தாக்குதலில் குறிவைக்கப்பட்ட உணவகங்களில் ஒன்று, இந்திய பாரம்பரிய உணவு வகைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் குறித்து லாகூர் நகரம் அமைந்துள்ள பஞ்சாப் மாகாணத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் கவாஜா சல்மன் ரஃபீக் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
லாகூரில் ராணுவத்தினர் வீட்டுவசதி சங்கத்தின் (டிஹெச்ஏ) சந்தைப் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 4 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.
"பாம்பே சப்பாத்தி', "அல்ஃபார்னோ கஃபே' ஆகிய இரு உணவகங்களைக் குறிவைத்து இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது உறுதியாகத் தெரிகிறது.
"பாம்பே சப்பாத்தி' உணவகத்துக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் மறைத்து வைக்கப்பட்டு, இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இந்த உணவகத்துக்கு இளம் ஜோடிகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறேம்.
சமையல் எரிவாயுக் கசிவு காரணமாக நிகழ்ந்த விபத்தாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவத்தினரும், எல்லைக் காவல் படையினரும் அந்தப் பகுதியை சுற்றிவளைத்தனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதற்கிடையே, "பாகிஸ்தான் சூப்பர் லீக்' கிரிக்கெட் போட்டியைக் குலைப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாகாண சட்டத் துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்தார்.
ராணுவத்துக்குச் சொந்தமான டிஹெச்ஏ பகுதியில் இயங்கி வரும் உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக மையங்களும், பள்ளிகள் முதலானவையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இதுதவிர, தற்போது பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்து வருவதால், லாகூரின் முக்கிய வணிக மையங்கள் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்தகைய பாதுகாப்புக்கிடையிலும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT