உலகம்

உலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை சற்று நேரம் பின்னுக்குத் தள்ளிப் பார்த்த பங்குச் சந்தை 

DIN


பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சற்று நேரம் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பேசோஸ், பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி சிறிது நேரம் முதல் இடத்தில் இருந்தார்.

ஆண்டு தோறும் உலகப் பணக்காரர்கள், உலகில் அதிக அதிகாரம் மிக்கவர்கள் என்று விதவிதமாக பட்டியலை வெளியிடும் போஃபர்ஸ் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது, மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்ததைத் தொடர்ந்து  இந்த மாற்றம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அந்த குறிப்பிட்ட நேரத்தில், பில் கேட்ஸின் பங்கு வர்த்தக மதிப்பு 90 மில்லியன் டாலராக இருந்தது. அதே நேரம், ஜெஃப் பேசோஸ் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 90.60 மில்லியன் டாலராக உயர்ந்தது. அந்த சமயத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி ஜேஃப் பேசோஸ் முதலிடம் பிடித்தார்.

சில மணி நேரத்தில், அமேசான் நிறுவனப் பங்குகளின் விற்பனை சரிந்ததால், பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்துக்கு வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT