உலகம்

சோமாலியாவில் கடும் வறட்சி: இரண்டு நாட்களில் 110 பேர் பட்டினி சாவு!

DIN

மொகாடிசு: சோமாலியாவின் தென் மேற்கு வளைகுடா பகுதியில் வறட்சி காரணமாக இரண்டு நாட்களில் மட்டும் 110 பேர் பட்டினியால் இறந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடுமையான குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியின் விளைவாக அங்கு வாழும் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள அவ்டின்லே நகரில் ஏராளமானவர்கள் செத்து வருகின்றனர். அங்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. இதன் விளைவாக காலரா நோய் பரவி வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து மட்டும் வெளியாகி உள்ளது. இதுபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் உணவின்றி உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில் சோமாலியாவை வறட்சி பாதித்த பேரழிவு நாடாக  அந்நாட்டு அதிபர் முகமது அப்துல்லாகி பார்மஜோ அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT