உலகம்

கானா நாட்டில் அருவியில் குளித்த பள்ளி மாணவர்கள் 20 பேர் பலி

DIN

அக்கிரா: கானா நாட்டில் அருவியில் குளித்த பள்ளி மாணவர்கள் 20 பேர் பலி
அக்கிரா: கானா நாட்டில் அருவியில் குளித்த 20 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆசிரியர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் காயமடைந்தனர்.

ஆப்பிரிக்க நாடான கானாவில் பிராங் அகாபோ பகுதியில் கின்டாம்போ என்னும் பிரபல அருவி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் வார விடுமுறை என்பதால் இந்த அருவியில் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள வென்சி மெத்தடிஸ்ட் என்ற உயர்நிலை பள்ளியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு வந்தனர். அவர்கள் சுற்றுலா பயணிகளுடன் அருவியின் கீழ் பகுதியில் உற்சாகமாக நீந்திக் குளித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, திடீரென பலத்த மழையுடன் பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. இதில், சுமார் 30க்கும் மேற்பட்ட மரங்கள் உடைந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில், 20 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் காயம் அடைந்தனர்.

 சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த போலீஸாரும், மீட்பு குழுவினரும், குடியிருப்பு வாசிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் மாணவர்கள் பலியான சம்பவம் கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

கானா நாட்டின் குடியரசு தலைவர் நானா, திங்களன்று நடந்த விபத்து "துரதிர்ஷ்டவசமானது" என்றும் துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT