உலகம்

ஈராக்கில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 330 பேர் பலி! 

DIN

பாக்தாத்: ஈராக் நாட்டில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 330 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் எண்ணிக்கையானது  5 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து, ஈரான் - ஈராக் எல்லை பகுதியில் 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மத்திய தரைக்கடலோரப் பகுதி வரை மேற்கு நோக்கி இருந்தது. துருக்கி, சிரியா, குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், ஆர்மேனியா, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஈரானின் மேற்கு ஹெர்மன்ஷா மாகாணத்தில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டு  உள்ளது.

இடிபாடுகளில் சிக்கி இதுவரை 330  பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT