உலகம்

காங்கோவில் சரக்கு ரயில் தடம் புரண்டு 33 பேர் பலி

தினமணி

காங்கோவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதையடுத்து, அதில் பயணம் செய்த 33 பேர் பலியாகினர்.
 இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்தது: லுபும்பாஷிவிலிருந்து லுயேனாவுக்கு எரிபொருள் எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயிலில் ஏராளமானவர்கள் சட்ட விரோதமாகப் பயணம் செய்தனர். மலைப்பாங்கான இடத்தில் அந்த ரயில் தடம் புரண்டு பள்ளத்தில் விழுந்தது. ரயில் என்ஜினுடன் 13 எண்ணெய் டாங்குகளும் பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தன. இதுவரை 33 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மலைப்பாங்கான இடம் என்பதால் மீட்புப் பணிகள் மிக மெதுவாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT