உலகம்

கரீபியன் தீவுகளை தாக்கிய 'இர்மா புயல்' விடியோ

DIN

நன்றி: பிசினஸ் இன்ஸைடர் யூகே ஃபேஸ்புக் பக்கம்

அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் சக்திவாய்ந்த இர்மா புயல் புதன்கிழமை மதியம் 1:45 மணியளவில் தாக்கியது. சுமார் 185 மைல் வேகத்தில் இந்தப் புயல் கரையைக் கடந்தது. இது 5-ம் நிலை புயல் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இர்மா புயல் காரணமாக ஹைதி, செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்தலெமி ஆகிய தீவுகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா புயல் காரணமாக வீடுகளின் கூரைகள் பறந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இதனால் ஃப்ளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட ஹார்வி புயல் காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பேரழிவை சந்தித்தது. இந்நிலையில், இர்மா புயல் கரீபியன் நாடுகளை
தாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT