உலகம்

சிரியாவில் அரசுப்படைகளின் ரசாயன தாக்குதல்: 70 பேர் பலி! 

DIN

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள  கிழக்கு கூட்டா பகுதியில் அரசுப்படைகள் நடத்திய ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன 

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது.இப்படி சிரியாவில்நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள  கிழக்கு கூட்டா பகுதியில் அரசுப்படைகள் நடத்திய ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன 

தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டு உள்ளன. அப்பொழுது அங்கு நடந்த  சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக அங்கு பணியாற்றி வரும் அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீவிரவாத தாக்குதலுக்கு அஞ்சி புகலிடங்களில் வசித்த குடும்பத்தினர் உள்பட பலர் பலியாகி என்று தெரிகிறது. ஹெலிகாப்டர் ஒன்றின் வழியே சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு அந்த பகுதியில் வீசப்பட்டிருக்கக் கூடும்

பலி எண்ணிக்கை 100-க்கு மேல் இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இரவு நேரம் மற்றும் தொடர் குண்டு வீச்சு ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT