உலகம்

அமெரிக்கா: அனுமதியின்றி பயணிகள் விமானத்தை ஓட்டிச் சென்ற பொறியாளர்!

DIN

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தை அனுமதியின்றி ஓட்டிச் சென்ற அந்த விமான நிறுவனப் பொறியாளர், அதனை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தின்போது அந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லாதால், அந்தப் பொறியாளர் மட்டும் இதில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வாஷிங்டன் மாகாணம், சீட்டல் பெருநகரப் பகுதியில் உள்ள சீட்டல்-டகோமா விமான நிலையத்தில் ஹாரிஸன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் பராமரிப்புக்காக வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தது.
பம்பார்டியர் டாஷ் 8 க்யூ400 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்துக்குள் சென்ற ஹாரிஸன் ஏர் நிறுவனப் பொறியாளர் ஒருவர், உரிய அனுமதியில்லாமல் அந்த விமானத்தை திடீரென கிளப்பிச் சென்றார்.
இதைக் கண்ட விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை இயக்கக் கூடாது என்று தடுத்தும் அந்த உத்தரவை மீறி அவர் ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து, சீட்டல்-டகோமா விமான நிலையத்தின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த இரு எஃப்-15 ரகப் போர் விமானங்கள் ஹாரிஸன் ஏர் விமானத்தைப் பின் தொடர்ந்து, அந்த விமானத்தை இடைமறிக்க முயன்றன.
எனினும், சீரற்ற முறையில் தொடர்ந்து பறந்து சென்ற அந்த விமானம், பியூஜெட் கடல் பகுதியில் தாழ்வாகச் சுழன்று பறந்தது.
இறுதியாக, கெட்ரான் தீவுப் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தை ஓட்டிச் சென்ற பொறியாளர் உயிரிழந்தார். விமானத்தை ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டு அறை அதிகாரியுடன் உரையாடிய அந்த 29 வயதுப் பொறியாளர், தாம் மன வேதனையில் இருப்பதாகவும், "மறை கழன்ற' நபர் என்றும் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியாக இருக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT