உலகம்

ஜப்பான் உணவு விடுதியில் பயங்கர வெடிவிபத்து: 42 பேர் படுகாயம் 

DIN

டோக்கியோ: ஜப்பானின் சப்போரா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் ஞாயிறு இரவு ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 42 பேர் படுகாயம் அடைந்தனர். 

ஜப்பானின் சப்போரோ நகரில் பிரபல உணவு விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் ஞாயிறு இரவு திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் உண்டான் அதிர்வின் காரணமாக அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வெடிவிபத்து குறித்த தகவலறிந்து, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கடுமையாகப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாங்க  சப்போரோ நகர தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

வெடி விபத்துக்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியாத நிலையில், சப்போரோ நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT