உலகம்

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர் ஆதரவு: அமெரிக்க எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

DIN

இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கும், ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கும் விரும்பும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது தொடர்கிறது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான எம்.பி.க்கள் குழுக் கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற எம்.பி. டெட் யோஹா கூறியதாவது:
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பரஸ்பர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவில் முக்கிய குறிக்கோளாகும். ஆனால், பயங்கரவாதிகளை ஒடுக்குவதில், பாகிஸ்தான் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, அந்நாட்டுக்கு வழங்க இருந்த 2,00 கோடி டாலர் (ரூ.12,856 கோடி) நிதியுதவியை அமெரிக்கா கடந்த மாதம் நிறுத்தி விட்டது.
பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா படிப்படியாகக் குறைத்துவிட்டது. இந்நிலையில், அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கும், ஆப்கானிஸ்தானின் அரசியல் ஸ்திரத்தன்மையை குலைக்கவும் விரும்பும் பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு ஏன் அனுமதிக்க வேண்டும்? என்றார் அவர். அவரைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தனர். 
""கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவியாக 1,100 கோடி டாலர், பாதுகாப்புக்காக 800 கோடி டாலர் என மொத்தம் 1,900 கோடி டாலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இதுவிர, கூட்டுச் செயல்பாடுகளுக்காக 1,400 கோடி டாலர்களை அமெரிக்கா வழங்கியது'' என்று மற்றொரு எம்.பி. பிராட் ஷெர்மான் கூறினார்.
மேலும், பாகிஸ்தானின் வெளியுறவு விவகாரங்களையும், உள்நாட்டு விவகாரங்களையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT