உலகம்

நேபாளத்தின் அடுத்த பிரதமராக கே.பி.சர்மா ஒலி தேர்வு

DIN

நேபாளத்தின் அடுத்த பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் (யூஎம்எல்) கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலியை அக்கட்சி புதன்கிழமை தேர்வு செய்தது.
நேபாளத்தில் கடந்த நவம்பர் 26ஆம் தேதியும் டிசம்பர் 7ஆம் தேதியும் இரு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தமுள்ள 275 இடங்களில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான சிபிஎன்-யூஎம்எல் கட்சியும் பிரசண்டா தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சியும் அடங்கிய இடதுசாரிக் கூட்டணி 174 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. 
மேலும், நாடாளுமன்ற மேலவையிலும் 39 இடங்களில் வெற்றி பெற்று இக்கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றது. இதன் மூலம் நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று பரவலாக நம்பிக்கை ஏற்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிபிஎன்-யூஎம்எல் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் லலித்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற சிபிஎன்-யூஎம்எல் கட்சியின் தலைவராக கே.பி.சர்மா ஒலி இருப்பதால் அவரையே புதிய பிரதமராக கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இத்தகவலை அக்கட்சியின் மூத்த தலைவரான சுரேந்திர பாண்டே கூறியதாக 'தி காத்மாண்டு போஸ்ட்' பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.
இதனிடையே, லலித்பூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பிரசண்டா தலைமையிலான கட்சியுடன் தங்கள் கட்சியை இணைப்பது தொடர்பாகவும் சிபிஎன்-யூஎம்எல் நிர்வாகிகள் விவாதித்தனர். இரு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் உட்கட்சி அளவில் விவாதங்களை நடத்திய பிறகு கட்சி இணைப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் மாலை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT