உலகம்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது முன்னாள் மாணவர்: விசாரணையில் தகவல்

DIN

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர்.

மேலும்  பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர், அதே பள்ளியில் படித்த நிகோலஸ் க்ரூஸ் (19) என்பதும், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

அவனது இணைதயளம் மற்றும் சமூக தளங்களை காவல்துறையினர் ஆராய்ந்ததில், அவன் மிகவும் மன அழுத்தத்தில் இருந்து தெரிய வந்திருப்பதாகவும், அவன் ஏராளமான வார இதழ்களை வைத்திருந்ததாகவும், ஏஆர்-15 துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் திடீரென ஒருவர் உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டதும் பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  உடனடியாக பள்ளியை விட்டு வெளியேறினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக  அப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அங்குவிரைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை  மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

மேற்கொண்டு  போலீஸார் நடத்திய  விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என தெரிய வந்துள்ளது. மேலும் அந்த  நபரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டு அந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ட்ரம்ப் இரங்கல்: 
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT