உலகம்

ஈரான் விமான விபத்தில் 66 பேர் சாவு

Raghavendran

ஈரானைச் சேர்ந்த ஏடிஆர் 72 ரக ஏசிமான் ஏர்லைன்ஸைச் சேர்ந்த பயணிகள் விமானம் தெஹரானில் இருந்து தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள யசூஜ் என்ற இடத்துக்கு பயணித்தது.

அதில், விமான ஓட்டி, துணை விமானி, விமான பணியாளர் இருவர், பாதுகாவலர்கள் இருவர் மற்றும் 60 பயணிகளுடன் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளது. 

அப்போது, டீனா மலைப்பகுதியின் அருகில் சென்றபோது அங்கு ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி அதில் பயணித்த 66 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக உதவிக் குழுவினர் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை என்று ஈரான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் மோஜ்தாபா கலேடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT