உலகம்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த 15 பேர்களுக்கு தூக்குத் தண்டனை அறிவிப்பு! 

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருநது அந்நாட்டு ராணுவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த 15 பேர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

DIN

பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருநது அந்நாட்டு ராணுவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த 15 பேர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஈராக் ராணுவம் தற்பொழுது மீட்டெடுத்தது. அப்பொழுது ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து ராணுவத்துக்கு எதிராக சண்டையில் ஈடுபட்ட ஏராளமானோர் பிடிபட்டனர்.

இவர்கள் துருக்கி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது பாக்தாத் நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் துருக்கி நாட்டைச் சேர்ந்த  15 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் சட்டப்படி மேல் முறையீடு செய்ய இயலும் என்று நீதிமன்ற கோர்ட்டு செய்தி தொடர்பாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த வாரம் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒரு துருக்கி பெண்ணுக்கு தூக்குத் தண்டனையும், 10 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT