உலகம்

கலிஃபோர்னியாவில் வரலாறு காணாத காட்டுத்தீ அணைப்பு

DIN

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக எரிந்து வந்த "தாமஸ்' காட்டுத்தீ, முழுவதுமாக அணைக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அந்த மாகாணத்தின் வென்சுரா மற்றும் சாந்தா பார்பரா பகுதிக் காடுகளில் ஏற்பட்ட இந்தத் தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தக் காட்டுத்தீயில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலிஃபோர்னியா மாகாண வரலாற்றிலேயே "தாமஸ்' காட்டுத்தீதான் மிக மோசமானது என்று கூறப்படுகிறது. இந்தத் தீ காரணமாக, லாஸ் ஏஞ்சலீஸ் போன்ற ஒரு மிகப் பெரிய நகரின் அளவுக்கு, சுமார் 1,141 சதுர கி.மீ. பரப்பளவு எரிந்து சாம்பலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT