உலகம்

காஸா: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்

DIN

எகிப்து மற்றும் பிற நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, இஸ்ரேலுடன் சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 
காஸா எல்லையில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியது (படம்). 
காஸாவிலிருந்தும் இஸ்ரேலை நோக்கி ஏராளமான எறிகணைகள் வீசப்பட்டன. அதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் முற்றி, கடந்த 2014-ஆம் ஆண்டைப் போல் முழு போராக உருவெடுக்கும் என்று அஞ்சப்பட்டது. 
இந்த நிலையில், சண்டை நிறுத்தம் மேற்கொண்டதாக ஹமாஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அமைதி திரும்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT