உலகம்

செய்தியாளருக்குத் தடை: டிரம்ப் மீது வழக்கு

DIN


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சிஎன்என் தொலைக்காட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த தொலைக்காட்சியின் செய்தியாளருக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது விசாரணைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஎன்என் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஜிம் அகோஸ்டா என்ற செய்தியாளர், அண்மையில் டிரம்ப் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின்போது மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் விவகாரம் குறித்து கேள்விகளை எழுப்பினார்.
அப்போது டிரம்புக்கும், அகோஸ்டாவுக்கும் இடையே காரசார விவாதம் எழுந்தது. இதையடுத்து அந்த செய்தியாளரிடமிருந்த மைக்கினை வெள்ளை மாளிகையைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் அகற்ற முற்பட்டார். அதைத் தடுத்த அகோஸ்டா, அப்பெண்ணின் கைகளை தட்டி விட்டதாகத் தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக வெள்ளை மாளிக்கைக்குள் அகோஸ்டா நுழைவதற்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையை திரும்பப் பெறுமாறு சிஎன்என் தரப்பில் வெள்ளை மாளிகைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், பெண் ஊழியர்களிடம் செய்தியாளர்கள் பலப் பிரயோகத்தை காட்டுவதை ஏற்க முடியாது என்று கூறி அந்தக் கோரிக்கையை வெள்ளை மாளிகை நிராகரித்தது.
இந்தச் சூழலில், அதிபர் டிரம்ப் உள்ளிட்டோருக்கு எதிராக வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் சிஎன்என் வழக்கு தொடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT