உலகம்

ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவி விலகல்

DIN


ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹெய்ம், தனது பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை விலகினார்.
கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹெய்ம், தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.57 கோடி) செலவிட்டது, அந்த அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டது. மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.
ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, நிதி பற்றாக்குறையில் தவிக்கும் நிலையில், எரிக்கின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மேலும், சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகியுள்ளார்.
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள், போலந்தில் அடுத்த மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT