உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸிக்கு எதிராக கைது வாரண்டு

DIN


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் கஹான் அப்பாஸிக்கு எதிராக பிணையில் வெளிவரக் கூடிய கைது வாரண்டு உத்தரவை லாகூர் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அளித்த பேட்டியில், அந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்திருந்தார். மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என்று அந்நாடு மறுத்துவரும் நிலையில், நவாஸ் ஷெரீஃப் இவ்வாறு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அப்போதைய பிரதமர் ஷாஹித் கஹான் அப்பாஸி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவரங்களை நவாஸ் ஷெரீஃப்பை சந்தித்து அப்பாஸி தெரிவித்தார். முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப்புடன் அரசு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக அப்பாஸிக்கு எதிராக லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் அப்பாஸி ஆஜராகவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை அப்பாஸி தவிர்ப்பதாக லாகூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தொடுக்கப்பட்டது. அதேபோல், நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிராக தேசத் துரோக வழக்குப்பதிய வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், அப்பாஸிக்கு எதிராக பிணையில் வெளிவரக் கூடிய கைது வாரண்டு உத்தரவை வெளியிட்டது. அதேபோல், நவாஸ் ஷெரீஃப், அவரது பேட்டியை வெளியிட்ட பத்திரிகையாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் ஆணையிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT