உலகம்

மிக பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தை எதிர்பார்க்கவில்லை: இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர்

PTI


தேவாலயங்களைக் குறி வைத்து குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், நாட்டில் உள்ள அனைத்து  தேவாலயங்களையும் பாதுகாப்பது என்பது செய்யவே முடியாத விஷயம் என்று இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் ஹேமசிரி பெர்னான்டோ கூறியுள்ளார்.

இலங்கையில் 21ம் தேதி நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 இந்தியர்கள உட்பட 300ஐ தாண்டியது.

இது குறித்துப் பேசிய பெர்னான்டோ, தேவாலயங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று முன்னெச்சரிக்கைச் செய்தி வந்தாலும், நாட்டில் ஆயிரக்கணக்கான தேவாலயங்கள் இருக்கும் போது அனைத்துக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது முடியாத காரியம். 

நாட்டில் மிகச் சிறிய பயங்கரவாதக் குழு செயல்படுவதாக முன்னெச்சரிக்கைச் செய்தி வந்தாலும், இவ்வளவு பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கவேயில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்படியே பாதுகாப்புக் கொடுப்பதாக இருந்தாலும், நட்சத்திர விடுதிகளுக்கு அரசு பாதுகாப்புக் கொடுத்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

SCROLL FOR NEXT