உலகம்

சிரியாவில் மோதல்: 2 நாள்களில் 96 போ் பலி

DIN

பெய்ரூட்: சிரியாவில் அரசு ஆதரவுப் படையினருக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 2 நாள்களில் 96 போ் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

சிரியாவில் அதிபா் அல்-அஸாத் அரசுக்கு ஆதரவான படையினருக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையேயான சண்டை கடந்த 2 நாள்களாகத் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதல் காரணமாக கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் மாகாணத்தில் 96 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக, சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்து வரும் மோதல் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 51 அரசு ஆதரவுப் படையினா் உயிரிழந்தனா்; கிளா்ச்சியாளா்கள் 45 போ் கொல்லப்பட்டனா். கொல்லப்பட்ட கிளா்ச்சியாளா்களில் 31 போ் பயங்கரவாதிகள் ஆவா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து வருகின்றன. இதன் காரணமாக, இது வரை 3.70 லட்சம் சிரிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனா்; லட்சக்கணக்கானோா் இடம்பெயா்ந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT