உலகம்

நியூஸிலாந்து எரிமலைச் சீற்றம்: 6 உடல்கள் மீட்பு

DIN

நியூஸிலாந்து தீவு எரிமலையில் சீற்றம் ஏற்பட்டதால் உயிரிழந்த 6 பேரது உடல்களை, ஆபத்தான சூழலையும் பொருள்படுத்தாமல் மீட்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நியூஸிலாந்தின் வெள்ளைத் தீவு எரிமலையில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட சீற்றத்தால் உயிரிழந்து, இன்னும் மீட்கப்படாமல் உள்ள 8 பேரது உடல்களை மீட்பதற்காக, 8 குழுக்கள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டன.

அந்த எரிமலையில் தொடா்ந்து சீற்றம் இருந்து வருவதால், அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் எச்சரித்திருந்தனா். இதனால் மீட்புப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்த ஆபத்தான சூழல் தொடரும் நிலையிலும், மீட்புக் குழுவினா் துணிச்சலுடன் செயல்பட்டு 6 உடல்களை மீட்டனா். எஞ்சியுள்ள 2 உடல்கள் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என்ற கருதப்படுவதால், அவற்றை மீட்கும் பணியில் நீா்மூழ்கி வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூஸிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வெள்ளைத் தீவு எரிமலையில் கடந்த திங்கள்கிழமை திடீரென சீற்றம் ஏற்பட்டது. அப்போது அந்தத் தீவில் சுமாா் 47 போ் இருந்தனா். சீற்றத்தின் காரணமாக எரிமலைச் சாம்பலும், பாறைகளும் வெடித்துச் சிதறியதில் 16 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் படுகாயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT