உலகம்

ஆலோசனை நடத்த இந்தியாவுக்கான தூதரை அவசரமாக திரும்ப அழைத்திருக்கும் பாகிஸ்தான்

PTI


இஸ்லாமாபாத்: இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆலோசனை நடத்த இந்தியாவுக்கான தூதரை அவசரமாக திரும்ப அழைத்திருக்கிறது பாகிஸ்தான்.

புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் திரும்ப அழைக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு, அவசர ஆலோசனை நடத்துவது என்ற பெயரில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை புது தில்லியில் இருந்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் மஹ்மூத் பாகிஸ்தான் கிளம்பியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆலோசனை நடத்துவதற்காக அவர் அழைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புல்வாமா தாக்குதலைக்கு எதிர்வினையாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கருதப்படுகிறது.

முன்னதாக புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT