உலகம்

காங்கோ: டேங்கர் லாரி - பேருந்து மோதி விபத்து: 18 பேர் பலி

DIN


தென் ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் நின்றுக் கொண்டிருந்த பேருந்து மீது அமிலம் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
காங்கோ நாட்டின் பல இடங்களில் தாமிரம் மற்றும் கோபால்ட் கனிமச் சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பாறையில் உள்ள கனிமங்களை பிரிப்பதற்காக லாரிகளில் அமிலம் கொண்டு செல்லப்படுகிறது. 
அதன்படி தான்சானியாவிலிருந்து அமிலம் ஏற்றி வந்த லாரி ஒன்று தென்கிழக்குப்பகுதியில் உள்ள லுபும்பாஷி- கோல்வீஸி பகுதிக்கு இடையே ஃபுங்குரூம் கிராமத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது நடந்த இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.  
இதுகுறித்து லோலாபா மாகாண போக்குவரத்து காவல்துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: தான்சானியா நாட்டின் பதிவெண் கொண்ட அந்த டேங்கர் லாரி, நின்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக மோதியது. லாரி கவிழ்ந்த வேகத்தில் அதிலிருந்த அமிலம் பேருந்து மீதும், அதிலிருந்த பயணிகள் மீதும் கொட்டியதில் 21 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று தெரிவித்தார். 
அதேசமயம் லோலாபா மாகாண சுகாதார அமைச்சர் சாமி காயம்பூ கூறுகையில், விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். 
விபத்துக்குள்ளான டேங்கர்லாரியில் இருந்து வெளியேறிய அமிலக்கசிவு வியாழக்கிழமை மதியம் வரையிலும் நீடித்தது. அமிலத்தின் நெடி அருகிலுள்ள காப்வே கிராமத்தையும் தாக்கியது. 
விபத்து காரணமாக அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
காங்கோ நாட்டில் பெரும்பாலும் மோசமான நிலையில் உள்ள சாலைகளில், வேகமாக செல்லும் வாகனங்களால்தான் இதுபோன்ற துயரமான விபத்துகள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT