உலகம்

அமெரிக்காவில் ஒரே வீட்டில் இருந்து 1,000-க்கும் மேல் துப்பாக்கிகள் பறிமுதல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரே வீட்டில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ANI

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரே வீட்டில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல் நகரின் ஹாலம்பி ஹில்ஸ் மற்றும் பெல் ஏர் பகுதிகளின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலிஸார் மற்றும் வெடிபொருட்கள், போதை பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் சோதனை நடத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக ஒரு நபரையும் கைது செய்தனர். 

இந்நிலையில், அந்த வீட்டில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னதாக, 2015-ஆம் ஆண்டு ஒரு வீட்டில் இருந்து 1,200 துப்பாக்கிகளும், 2 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் டிரைலர்!

ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

SCROLL FOR NEXT