உலகம்

தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்

DIN

சர்ச்சைக்குரிய தைவான் ஜலசந்தி வழியாக தங்களது இரு போர்க் கப்பல்கள் செலுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு கடற்படை கூறியதாவது: அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் பிரெபிள் (படம்), யுஎஸ்என்எஸ் வால்டர் எஸ் டைஹல் ஆகிய இரு கப்பல்கள், கடந்த புதன்கிழமை தைவான் ஜலசந்தியைக் கடந்து சென்றன.
இந்தோ - பசிபிக் கடல் பகுதிகளில் அனைத்து நாடுகளுக்கும் உள்ள உரிமையை நிலைநாட்டும் வகையில் அந்தக் கப்பல்கள் தைவான் ஜலசந்தி வழியாகச் செலுத்தப்பட்டன.
சர்வதேச சட்டங்கள் அனுமதிக்கும் எந்த கடல் பகுதியிலும் அமெரிக்க போர்க் கப்பல்கள் செலுத்தப்படும் என்று அமெரிக்க கடற்ப்படை தெரிவித்தது.
தென்சீனக் கடல் பகுதியிலும், தைவான் ஜலசந்தியிலும் சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், சர்வதேச கடல் பகுதியில் பயணிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்தப் பகுதிகளில் அடிக்கடி ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
சீனா எதிர்ப்பு: தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்கப் போர்க் கப்பல்கள் புதன்கிழமை செலுத்தப்பட்டது குறித்து அந்த நாட்டிடம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக சீனா வியாழக்கிழமை தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT