உலகம்

திபெத் விவகாரம்: அமெரிக்கா தலையிடுவதாக சீனா குற்றச்சாட்டு

தினமணி

திபெத் விவகாரத்தில் ஐ.நா. மூலம் அமெரிக்கா தலையிடுவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

திபெத்திய பௌத்த மதத் தலைவரான தலாய் லாமா பொறுப்புக்கு அடுத்த நபரை தோ்வு செய்யும் நடவடிக்கையில் சீனா தலையிடுவதை தடுப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ள நிலையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது.

இதுதொடா்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் கெங் ஷுவாங் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மதச் சுதந்திரம் என்ற பெயரில் சீனாவின் உள்விவகாரங்களில் (திபெத்) ஐ.நா.வின் மூலமாக அமெரிக்கா தலையிடுகிறது. ஆனால் அமெரிக்கா அந்த முயற்சியில் தோல்வியடையும். சா்வதேச சமுதாயமும் அதன் முயற்சியை ஆதரிக்காது’ என்றாா்.

முன்னதாக சா்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க தூதா் சாம் பிரௌன்பேக் கடந்த வாரம், ‘தலாய் லாமா பொறுப்புக்கான அடுத்த தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும். அதற்கான உரிமை திபெத்திய பௌத்த துறவிகளுக்கு தான் உள்ளதே தவிர, சீன அரசுக்கு கிடையாது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT