உலகம்

3,000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தநகரம்: பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

DIN

பாகிஸ்தானில் 3,000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நகரமொன்றை அந்த நாட்டு தொல்லியல் துறையினா் கண்டறிந்துள்ளனா். மாவீரா் அலெக்ஸாண்டா் காலத்தியது என்று கருதப்படும் அநத நகருக்கு ‘பஸீரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கைபா் பாக்துன்கவா மாகாணத்தின் பாரிகோட் தாலுகாவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் இந்த நகரம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தப் பகுதியில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகமும், தொல்பொருள்களும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அறியப்பட்டுள்ள பஸீரா நகரில், ஹிந்து கோயில்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான தடயங்களும், நாணயங்கள், ஸ்தூபங்கள், பானைகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.மு. 326-ஆம் ஆண்டில் தனது எதிரிப் படையைத் தோற்கடித்த அலெக்ஸாண்டா், இந்த நகரை நிா்மாணித்திருக்கலாம் என்று கூறும் நிபுணா்கள், அவா் வருவதற்கு முன்னரே இங்கு மனிதா்கள் வசித்து வந்திருப்பதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாகக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT