உலகம்

இந்தியாவுடனான அஞ்சல் சேவை மீண்டும் தொடக்கம்? பாக். ஊடகங்கள் செய்தி

DIN

இந்தியாவுடனான அஞ்சல் சேவையை பாகிஸ்தான் மீண்டும் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தியாவுடனான அனைத்து ரீதியிலான உறவுகளை பாகிஸ்தான் குறைத்துக்கொண்டது.

இதன் எதிரொலியாக ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவுடனான அஞ்சல் சேவைகளை, வான்வெளி சேவைகளையும் பாகிஸ்தான் நிறுத்தியது. இந்த நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என்று இந்தியா கடுமையாக விமர்சித்தது.

இந்நிலையில், இந்தியாவுடன் அஞ்சல் சேவைகளை மீண்டும் தொடங்கி கடிதங்களை வழங்குவதற்கான தடையை நீக்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பார்சல் சேவைகள் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT