உலகம்

அள்ள அள்ளத் தங்கம்: சீன முன்னாள் மேயரின் ரகசிய அறையில் 13 ஆயிரம் கிலோ தங்கம் பறிமுதல்!

DIN

சீனாவின் முன்னாள் மேயரும், பல்வேறு அரசுப் பதவிகளை வகித்தவருமான ஜாங் குய்-யின் வீட்டில் இருந்த ரகசிய அறையில் 13 ஆயிரம் கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடான சீனாவின், அன்ஹுயி மாகாணத்தைச் சேர்ந்தவர், ஜாங் குய், 58. கடந்த, 1983ல், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். ஹைனான் மாகாணத்தில் உள்ள, சான்யா நகர துணை மேயராகவும், தான்ஜாவு நகர மேயராகவும் பணியாற்றினார். ஹைனான் மாகாண தலைநகரான ஹைகுவில், கம்யூனிஸ்ட் கட்சியின் செயலராக இருந்தார், இது, மேயர் பதவிக்கு நிகரானது.

இந்நிலையில், ஜாங் வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்பு தங்க கட்டிகள் உள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீட்டில், போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு அறையில், தங்கக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம், 13.5 ஆயிரம் கிலோ அளவுக்கு தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு, 4.5 ஆயிரம் கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், அவரது வங்கி கணக்கில், 2.61 லட்சம் கோடி ரூபாய் பணம் இருந்ததும் தெரிய வந்தது. அவரது வங்கி கணக்கை, அதிகாரிகள் முடக்கினர். இதெல்லாம், அவர், மேயர் உட்பட பல பதவிகளை வகித்த போது, ஊழல் செய்து சம்பாதித்த பணம் என கூறப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்தான், சீனாவிலேயே பெரும் பணக்காரராக இருப்பார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி, ஜாங்கிடம், போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஜாங்கின் ஊழல் உண்மை என்று மாறிவிட்டால், அவர் ஃபோர்ப்ஸ் தகவல் படி சீனாவின் 37 பில்லியன் டாலர் (30 பில்லியன் டாலர்) மதிப்புள்ள சீனாவின் செல்வந்தரான ஜாக் மாவை (Jack Ma )விட பணக்காரராக இருந்திருப்பார்.

சீனாவில் அதிகபட்ச ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது வழக்கம் என்ற போதிலும் இதுபோன்ற மிகப்பெரிய தொகை கைப்பற்றப்பட்டிருப்பது முதன்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT