உலகம்

புதிய செயற்கைக் கோளைச் செலுத்தியது சீனா!

DIN


சீனாவின் தையுவான் செயற்கைக்கோள் ஏவுமையத்திலிருந்து, லாங்மார்ச்-4பி ஏவூர்தியின்மூலம், சீனாவின் கோஃபன்-10 எனும் செயற்கைக்கோள் அக்டோபர் 5ஆம் நாள் அதிகாலை 2:51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தச் செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட புவியின் சுற்றுவட்டப்பாதையைச் சென்றடைந்தது.

நில வளக் கணக்கெடுப்பு, நகரக் கட்டுமானத் திட்ட வரைவு, நெடுஞ்சாலை வலைப்பின்னல் திட்ட வரைவு, பயிர் விளைச்சல் மதிப்பீடு, பேரிடர் நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு இச்செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும்.

மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவின் செயல்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்பின் நவீனமயமாக்கமாகக் கட்டுமானத்துக்கும் இது தகவல்களை அளிக்கும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT