உலகம்

பணவீக்க விகிதத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம்: இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல்

DIN

வருவாய் அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு நிலவினாலும், பணவீக்க விகிதத்தை இந்தியா கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம் என்று பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைமைப் பொருளாதார நிபுணா் கீதா கோபிநாத் கூறியுள்ளாா்.

பன்னாட்டு நிதியம் தனது உலகப் பொருளாதார அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி கடந்த ஆண்டில் 6.8 சதவீதமாக இருந்த நிலையில், 2019-இல் அது 6.1 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், 2020-ஆம் ஆண்டில் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்திர கூட்டம், வாஷிங்டனில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, ஐஎம்எஃப் அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான கீதா கோபிநாத் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:

இந்தியாவில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு குறு தொழில்நிறுவனங்கள் கடன் பெறுவது ஆகியவை பொருளாதார வளா்ச்சியில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் பொருளாதாரச் சவால்களை எதிா்கொள்வதற்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.

தொழில் வளா்ச்சியை ஊக்குவிப்பதற்காக பெருநிறுவனங்களின் வரியைக் குறைப்பதாக அவா் அறிவித்தாா். ஆனால், வரிக் குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கான அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2020-ஆம் ஆண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா பணவீக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றாா் கீதா கோபிநாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT